பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஓய்வூதியதாரர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது

Posted On: 20 MAR 2025 11:41AM by PIB Chennai

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை 2025 மார்ச் 18 அன்று ஜெய்ப்பூரில் ஓய்வூதியதாரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. ஜெய்ப்பூரில் உள்ள மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் போது, ஓய்வூதியதாரர்கள் நலனை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகள் குறித்து ஓய்வூதியதாரர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பவிஷ்யா, ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்கள் தளம், சிபிஎன்கிராம்ஸ், ஓய்வூதிய குறைதீர்வு முகாம், துறையின் அழைப்பு மைய செயல்பாடுகள், அனுபவ் விருது பெற்றவர்கள் இணையக் கருத்தரங்கு தொடர், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம், முக அங்கீகாரம், ஓய்வூதியதாரர்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியக் கொள்கை தொடர்பான பிரச்சனைகள் ஆகியவை பற்றி இதில் விவாதிக்கப்பட்டன. ஓய்வூதியதாரர்களின் குறைகளை தரமான முறையில் தீர்ப்பது மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு ஓய்வூதிய உரிமைகள் மற்றும் செயல்முறைகள் தொடர்பான பல்வேறு விதிகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதும், கொள்கை மற்றும் நடைமுறைகளில் பல்வேறு திருத்தங்கள் மூலம் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவர்களுக்கு எடுத்துச் சொல்வதும்  இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

ஓய்வூதியதாரர் விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன், 8-வது  வங்கியாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் ஜெய்ப்பூரில் 18-ம் தேதி நடைபெற்றது. இதில் ஓய்வூதியம் தொடர்பான பணிகளைக் கையாளும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகள் பங்கேற்றனர். ஓய்வூதியதாரர்களின் குறைகளைக் களைவதற்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், மின்னணு ஆயுள் சான்றிதழ் முகாம் நடத்துதல் மற்றும் முக சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை உபயோகித்தல் குறித்து துறையின் மூத்த அலுவலர்கள் வங்கியாளர்களுடன் கலந்துரையாடினர். பல்வேறு வங்கிகளில் ஓய்வூதியம் தொடர்பான பணிகளைக் கையாளும் மத்திய ஓய்வூதிய செயலாக்க மையங்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கான தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கான எட்டாவது கருத்தரங்காக இது அமைந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மூத்த அதிகாரிகள், மத்திய அரசு ஓய்வூதியர் நலச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் இந்த விவாதங்களில் பங்கேற்றனர்.

***

(Release ID: 2113153)
TS/PKV/RR/KR


(Release ID: 2113174) Visitor Counter : 206


Read this release in: English , Urdu , Hindi