ரெயில்வே அமைச்சகம்
கவாச்: இந்தியாவின் அதிநவீன தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது
Posted On:
19 MAR 2025 4:47PM by PIB Chennai
கவாச் என்பது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி ரயில் பாதுகாப்பு (ஏடிபி) அமைப்பாகும். ரயில் ஓட்டுநர் வேகக்கட்டுப்பாட்டு கருவியைப் பயன்படுத்தத் தவறினால் தானியங்கி முறையில் அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட வேக வரம்புகளுக்குள் ரயிலை இயக்க ஓட்டுநருக்கு கவாச் அமைப்பு உதவுகிறது.
மேலும் மோசமான வானிலையில் ரயில்களைப் பாதுகாப்பாக இயக்கவும் உதவுகிறது.பயணிகள் ரயில்களில் இக்கருவி பொருத்தப்பட்டு முதல் கள சோதனை பிப்ரவரி 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கவாச் பாதுகாப்பு அமைப்பு தேசிய தானியங்கி ரயில் போக்குவரத்துக்கான பாதுகாப்பு அமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கவாச் பாதுகாப்பு முறையை அமைக்கும் பணிகளில் இதுவரை 1950 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2024-25-ம் ஆண்டிற்கு 1112.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112824
***
TS/SV/SG/KR/DL
(Release ID: 2113038)
Visitor Counter : 20