சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி நிதிக் கழகத் திட்டங்களை அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 19 MAR 2025 5:04PM by PIB Chennai

2024-25 நிதியாண்டில் தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு, நிதிக் கழகத்தின் (NMDFC) உதவி இலக்கு ரூ.850.00 கோடியாக உள்ளது. இது 10மார்ச் 2025 வரை 1,74,148 பயனாளிகளுக்கு ரூ.752.23 கோடி வழங்கியுள்ளது.

தேசிய சிறுபான்மை வளர்ச்சி, நிதிக் கழகம் பயனாளிகளிடமிருந்து கடன் ஒப்பளிப்பு, விநியோகம், வசூல் செய்யும் அதிகாரம் ஆகியவற்றை அதன் மாநில முகமைகளுக்கு வழங்கியுள்ளது. சலுகைக் கடன் வழங்குவதற்கு உரிய தகுதிகளின்படி பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்:

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சிறுபான்மையினர் நலன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

***

TS/PLM/AG/DL


(रिलीज़ आईडी: 2113008) आगंतुक पटल : 40
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी