மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம்

प्रविष्टि तिथि: 19 MAR 2025 2:10PM by PIB Chennai

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை பிப்ரவரி-2014 முதல் நாடு முழுவதும் தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தை (என்பிடிடி)           செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் 2021-22 முதல் 2025-26 வரை பின்வரும் இரண்டு அம்சங்களுடன் செயல்படுத்துவதற்காக ஜூலை 2021-ல் மறுசீரமைக்கப்பட்டது.

(i) தேசிய பால்வள வளர்ச்சித் திட்டத்தின் முதல் அம்சம்  மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சம்மேளனங்கள் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புகள்/ சுய உதவிக் குழுக்கள் / பால் உற்பத்தியாளர் நிறுவனங்கள் / உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் தரமான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

(ii) தேசிய பால்வள வளர்ச்சித் திட்டத்தின் இரண்டாவது அம்சம், கூட்டுறவு மூலம் பால் பொருட்களின் விற்பனையை அதிகரித்தல், அமைப்பு சார்ந்த சந்தைகளை விவசாயிகள் அணுகுவதை அதிகரித்தல், உற்பத்தியாளர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தின் முதல் அம்சத்தின்  கீழ், 2247.46 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில் நாடு முழுவதும் 110 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரூ.177.61 கோடி மதிப்பீட்டில் 4 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் (2019-20 முதல் 2023-24 வரை) மொத்தம் 16041 பால் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டு, 15.31 லட்சம் விவசாயிகள் / பால் உற்பத்தியாளர்கள் என்பிடிடி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 9235 கூட்டுறவு சங்கங்களைச் சார்ந்த 3.79 லட்சம் விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களுக்கு ஆதாயமான விலை பெற்று பயனடைந்துள்ளதாகவும், இத்திட்டத்தின் மூலம் உற்பத்தியாளர்கள் தங்கள் பாலை எளிதாக விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தெரிவித்துள்ளது.

இன்று (2025 மார்ச் 19) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2112693)
TS/PLM/AG/KR

 


(रिलीज़ आईडी: 2112744) आगंतुक पटल : 90
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी