மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கடற்பாசி உற்பத்தி
Posted On:
18 MAR 2025 3:45PM by PIB Chennai
கடற்பாசி சாகுபடிக்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன. மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கையின்படி, 2023-ம் ஆண்டில் நாட்டில் மொத்த கடற்பாசி உற்பத்தி 72,385 டன் (ஈரத்துடன் எடை) ஆகும். சாகுபடி செய்யப்படும் முக்கிய வகைகளாக கப்பாபைகஸ் அல்வாரெசி மற்றும் கிராசிலரியா எடுலிஸ் ஆகியவை உள்ளன. கராஜீனன் மற்றும் அகர் உற்பத்திக்கு அவை பயன்படுத்தப்படுகின்றன. கடற்பாசி உணவு, உயிரி உரங்கள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், விலங்கு தீவனம் மற்றும் உயிரி எரிபொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
2020 ஜூன் மாதத்தில், மத்திய அரசு நாட்டில் மீன்வளத் துறையை மேம்படுத்துவதற்காக ரூ.20,050 கோடி மொத்த முதலீட்டுடன் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கியது. கடற்பாசி சாகுபடியை ஊக்குவிப்பது பிரதமரின் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை நடவடிக்கைகளில் ஒன்றாகும். மத்திய அரசின் பங்களிப்புடன் ரூ.194.09 கோடி மதிப்பிலான கடற்பாசி திட்டங்களுக்கு மத்திய அரசின் மீன்வளத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா நிறுவுதல், கடற்பாசி வளர்ப்பு குறித்த முன் சாத்தியக்கூறு மதிப்பீட்டு ஆய்வுகள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு மற்றும் பயிற்சித் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
தமிழ்நாடு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் & டையூ மற்றும் லட்சத்தீவு ஆகிய இடங்களில் கடற்பாசி விதை வங்கிகளை நிறுவுவதற்கான பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தகவலை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் 2025 மார்ச் 18 அன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
TS/IR/RR/DL
(Release ID: 2112510)
Visitor Counter : 24