நிதி அமைச்சகம்
2025 மார்ச் 7-ம் தேதி வரை மொத்தம் 55.02 கோடி ஜன்-தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன
Posted On:
18 MAR 2025 4:52PM by PIB Chennai
நாட்டில் இதுவரை வங்கி சேவை பெறாதவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கி நிதிசார் வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு வயதின் அடிப்படையில் வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. மத்திய அரசால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 07.03.2025 வரை மொத்தம் 55.02 கோடி ஜன்-தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன, இதில் 36.63 கோடி கணக்குகள் கிராமப்புறங்களிலும், புறநகர் பகுதிகளிலும் உள்ளன.
இத்திட்டம் தவிர, அனைவருக்கும் குறைந்த செலவில் நிதிசார் சேவைகளை வழங்குவதற்காக, குறிப்பாக பின்தங்கிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் : இத்திட்டம் ஒரு ஆண்டு கால தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டமாகும். இது ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்கதாகும். இத்திட்டத்தின் கீழ் உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனத்திற்கு ரூ.2 லட்சமும் விபத்து காரணமாக ஏற்படும் நிரந்தர பகுதி ஊனத்திற்கு ரூ.1 லட்சமும் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படுகிறது. இந்தக் காப்பீட்டிற்காக 20 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 18 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேர முடியும்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112321
****
TS/SV/KPG/DL
(Release ID: 2112502)
Visitor Counter : 24