மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கு காப்பீடு
Posted On:
18 MAR 2025 3:51PM by PIB Chennai
மீன்வளம் மற்றும் பால்வளத் துறைகளின் முழுமையான மேம்பாட்டிற்காக மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மீனவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குவதற்காக, மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆழ்கடல் மீனவர்கள் உள்ளிட்ட மீனவர்களுக்கு விபத்து காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. இதில் முழு காப்பீட்டு பிரீமியத் தொகையும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் செலுத்தப்படுகிறது. இந்த காப்பீட்டுத் திட்டத்தில் மரணம் அல்லது நிரந்தர ஊனத்திற்கு ரூ.5,00,000/-மும், பகுதி ஊனத்திற்கு ரூ.2,50,000/-மும், காயமடைவோருக்கு ரூ.25,000/-மும் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் (2020-24), இந்திய கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதற்காக கடல் வளர்ப்பு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசின் மீன்வளத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2112273
***
TS/GK/AG/DL
(Release ID: 2112496)
Visitor Counter : 39