எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறைந்த எஃகு விலை

Posted On: 18 MAR 2025 1:59PM by PIB Chennai

சந்தை சக்திகளின் தேவை, விநியோக இயக்கவியல், உலகளாவிய சந்தை நிலைமை, மூலப்பொருள் விலை போக்குகள், தளவாட செலவு, மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவு போன்றவற்றால் எஃகு விலை தீர்மானிக்கப்படுகிறது. எஃகு இறக்குமதியைக் குறைப்பதற்கும் உள்நாட்டு எஃகு உற்பத்தியாளர்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எஃகு தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், தொழில்துறை, பயனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தரமான எஃகு கிடைப்பதை உறுதி செய்வதுடன், உள்நாட்டு சந்தையில் தரமற்ற/ குறைபாடுள்ள எஃகு பொருட்கள் மற்றும் இறக்குமதியை இது தடை செய்கிறது.

உள்நாட்டு எஃகு தொழில்துறையின் பிரச்னைகளுக்கு தீர்வு காண எஃகு இறக்குமதி கண்காணிப்பு அமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் ஊக்குவிப்பு கொள்கை செயல்படுத்தப்படுகிறது.

உள்நாட்டு எஃகு தொழில்துறையின் தற்போதைய தேவை/நுகர்வை பூர்த்தி செய்ய நாட்டில் போதுமான இரும்புத் தாது இருப்பு உள்ளது. 2024 நிதியாண்டில் இரும்புத் தாது உற்பத்தி 270 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக இருந்தது, ஏற்றுமதி தோராயமாக 46 மில்லியன் டன்களாக இருந்தது, இறக்குமதி 4.9 மில்லியன் டன்களாக இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கனிமங்களின் விநியோகத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உற்பத்தி மேம்பாட்டை உறுதி செய்வதற்காக சுரங்க மற்றும் கனிமக் கொள்கை சீர்திருத்தங்கள், காலாவதியான குத்தகைகளுடன் கூடிய சுரங்கங்களை முன்கூட்டியே ஏலமிடுவது, வணிகம் செய்வதை எளிதாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

இந்தத் தகவலை எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112155

***

TS/GK/AG/KR


(Release ID: 2112378) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi