கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள்

Posted On: 18 MAR 2025 3:18PM by PIB Chennai

தேசிய கூட்டுறவு தரவுத்தளத்தின் படி, 2025 மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி, மாநில வாரியாக, கூட்டுறவு சங்கங்களின் மொத்த எண்ணிக்கை 8,32,188 ஆக உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 22,793 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.

மாநில கூட்டுறவு வங்கிகளின் எண்ணிக்கை 32 ஆகவும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் எண்ணிக்கை 338 ஆகவும், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் எண்ணிக்கை 1454 ஆகவும் உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் முதன்மை வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களைகா கணினிமயமாக்குவதற்கு மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2024-25- தமிழ்நாட்டிற்கு 24.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகள் உட்பட கூட்டுறவு சங்கங்களின் மேம்பாட்டிற்காக தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் நிதி உதவி அளித்துள்ளது.  இதில் தமிழ்நாட்டிற்கு 2024-25-ம் ஆண்டிற்கு மட்டும் 19.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112226

***

TS/GK/AG/KR


(Release ID: 2112376)
Read this release in: English , Urdu , Hindi