ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இலக்கை நிறைவு செய்த தீனதயாள் அந்த்யோதயா திட்டம் -தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம்

Posted On: 18 MAR 2025 2:57PM by PIB Chennai

கிராமப்புற ஏழைப் பெண்களைச் சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து, அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், நாடு முழுவதும் தீனதயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

2025 பிப்ரவரி 28-ம் தேதி  நிலவரப்படி, இந்த திட்டம்  7144 தொகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, 10.05 கோடி கிராமப்புற பெண்கள் 90.90 லட்சம் சுய உதவிக் குழுக்களில் இணைக்கப்பட்டுள்ளனர். அந்தக் குழுக்களுக்கு மொத்தம் ரூ. 51368.39  கோடி மூலதன ஆதரவு  நிதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டில் இலக்கு ரூ.24,682 லட்சம் ஆகும். இதில் 28.2.2025 வரை ரூ.18,362 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட ஏராளமான நடவடிக்கைகளை கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் எடுத்துள்ளது. நகர்ப்புற சந்தைகளில் சுய உதவிக்குழு தயாரிப்புகளின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக தேசிய மற்றும் மாநில அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்தத் தகவலை ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112200

***

TS/GK/AG/KR

 

 


(Release ID: 2112355) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi