சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: பிரதமரின் சிறப்புத் திட்டம்
Posted On:
18 MAR 2025 2:07PM by PIB Chennai
பிரதமரின் சிறப்பு (முதியோர் பராமரிப்பு அளிப்போருக்கான பயிற்சி) திட்டத்தின் முக்கிய நோக்கம், மூத்த குடிமக்களுக்கு அதிகத் தொழில்முறை சார்ந்த சேவைகளை வழங்குவதும் முதியோர் துறையில் தொழில்முறை பராமரிப்புக்கான பணியாளர்களை உருவாக்குவதும் முதியோர் பராமரிப்பாளர்களின் துறையில் அதிகரித்து வரும் தேவை மற்றும் விநியோகத்தில் உள்ள இடைவெளியை நிரப்புவதும் ஆகும். பொழுதுபோக்கு மற்றும் முழுமையான நல்வாழ்வு தொடர்பான முதியோரின் மாறுபட்ட மற்றும் மாறும் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அர்ப்பணிப்புள்ள, தொழில்முறை பயிற்சி பெற்ற முதியோர் பராமரிப்பாளர்கள் தேவையான எண்ணிக்கையில் கிடைப்பதை இத்திட்டம் உறுதி செய்யும்.
2023-24-ம் நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் 32 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு, 36,785 பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 150 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இருப்பினும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் பொதுவான கட்டண விதிமுறைகளின்படி பயிற்சி நிறுவனங்களுக்கு பயிற்சிக் கட்டணம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.
திட்ட வழிகாட்டுதல்களின்படி, பயிற்சி நிறுவனம் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் அல்லது வீட்டு பராமரிப்பு சேவை வழங்குநர்களுடன் இணைந்து பயிற்சி பெற்ற முதியோர் பராமரிப்பாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2112161)
TS/IR/RR/KR
(Release ID: 2112246)
Visitor Counter : 44