சுற்றுலா அமைச்சகம்
நமது தேசத்தை சுற்றிப் பாருங்கள் முன்முயற்சி
प्रविष्टि तिथि:
17 MAR 2025 3:53PM by PIB Chennai
நாட்டில் உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சகம் 2020 ஜனவரியில் நமது தேசத்தை சுற்றிப் பாருங்கள் (தேக்கோ அப்னா தேஷ்) முன்முயற்சியை அறிமுகப்படுத்தியது. இந்த முன்முயற்சியின் கீழ், இணையவழி கருத்தரங்குகள், விநாடி வினா, சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வுகள், சமூக ஊடக பிரச்சாரங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சுற்றுலா அமைச்சகம் நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களின் சிறப்புகளை எடுத்துரைத்து உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கிறது.
டிஜிட்டல், சமூக ஊடகங்கள், நிகழ்வுகள், அச்சு, வெளிப்புற, குறுஞ்செய்தி சேவை (எஸ்எம்எஸ்) மற்றும் வாட்ஸ்அப் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு தளங்கள் மூலம் மிகவும் விருப்பமான சுற்றுலா தலங்களை அடையாளம் காண குடிமக்களுடன் ஈடுபடுவதற்காக சுற்றுலா அமைச்சகம் தேக்கோ அப்னா தேஷ் பீப்பிள்ஸ் சாய்ஸ் வாக்கெடுப்பை அறிமுகப்படுத்தியது.
2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு சுற்றுலா பயணங்களின் எண்ணிக்கை சுமார் 28.60 கோடி ஆகும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(रिलीज़ आईडी: 2111994)
आगंतुक पटल : 47