சுற்றுலா அமைச்சகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துதல்
प्रविष्टि तिथि:
17 MAR 2025 3:45PM by PIB Chennai
சுற்றுலா அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் துணைத் திட்டமான சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாட்டில் 42 சுற்றுலாத் தலங்கள் 4 பிரிவுகளின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் ஆன்மிக பிரிவில் ராமேஸ்வரமும், கலாச்சார பிரிவில் தஞ்சாவூரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான விரிவான செயல் திட்டத்தை உருவாக்குவதற்கான மாதிரி ஒன்றை மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் பகிர்ந்துள்ளது.
நடைமுறைகளின்படி, இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் கருத்துருக்கள் உரிய அளவுகோல்கள், திட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் சுற்றுலா அமைச்சகத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்க பரிசீலிக்கப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா-கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(रिलीज़ आईडी: 2111989)
आगंतुक पटल : 34