தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
உரிமை கோரல் நடைமுறைகளை சீரமைப்பதற்கு தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகள்
Posted On:
17 MAR 2025 2:49PM by PIB Chennai
உரிமைகோரல் நடைமுறைகளை சீரமைப்பதறகான பல்வேறு நடவடிக்கைகளை தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு மேற்கொண்டுள்ளது. இவற்றில் சில பின்வருமாறு:
முன்பணம் கோரும் விண்ணப்பங்கள் மீது தானியங்கி முறையில் பரிசீலனை செய்வதற்கான உச்ச வரம்புத் தொகை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவமனை செலவுகள் தவிர கூடுதலாக, வீட்டுவசதி, கல்வி மற்றும் திருமணம் ஆகியவற்றுக்கான முன்பணம் கோரும் விண்ணப்பங்கள் மீதும் தானியங்கி முறையில் தொகைகளை விடுவிப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது, 60 சதவீதத் தொகையை முன்கூட்டியே பெறுவதற்கான நடைமுறைகள் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படுகின்றன.
தானியங்கி முறையில் கேட்புத் தொகை விண்ணப்பங்கள் மீதான செயல்பாடுகள் மூன்று நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்படும். நடப்பு நிதியாண்டில் 06.03.2025 நிலவரப்படி 2.16 கோடி விண்ணப்பங்களுக்கு தானியங்கி முறையில் தீர்வுகாணப்பட்டுள்ளது. இது 2023-24-ம் நிதியாண்டில் 89.52 லட்சமாக இருந்தது.
இந்த அமைப்பில் சேர்ந்துள்ள சந்தாதாரர்களின் விவரங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஆதார் எண்ணுடன் சரிபார்க்கப்பட்ட தனித்துவ அடையாள எண் கொண்ட சந்தாதாரர்கள்/ உறுப்பினர்கள் எவ்வித இடையூறும் இன்றி திருத்தங்களை மேற்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. தற்போது, 96 சதவீத திருத்தங்கள் இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111756
***
TS/SV/RJ/K/DL
(Release ID: 2111944)
Visitor Counter : 25