வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2025 பிப்ரவரி மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலை குறியீட்டு எண்கள் (அடிப்படை ஆண்டு: 2011-12)
Posted On:
17 MAR 2025 12:00PM by PIB Chennai
அகில இந்திய அளிவில் மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான 2025 பிப்ரவரி மாதத்திற்கான ஆண்டு பணவீக்க விகிதம் 2.38% (தற்காலிகமானது) ஆக உள்ளது.2025 பிப்ரவரி மாதத்தில் நேர்மறையான பணவீக்க வீதத்திற்கு, உணவுப் பொருட்கள் மற்றும் அது சார்ந்த பிற உற்பத்தி, உணவு அல்லாத பொருட்கள், ஜவுளி உற்பத்தி போன்றவற்றின் விலை உயர்வே முதன்மையான காரணிகளாகும்.
மொத்த விலைக்குறியீட்டு எண்களின் மாதாந்திர மாற்றத்திற்கான முக்கிய பிரிவுகள்:
முதன்மைப் பொருட்கள்: உணவுப் பொருட்களின் விலை (-2.05%), கச்சா பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு (-1.46%), தாதுக்கள் (-1.26%) மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை (-0.36%) 2025 ஜனவரி 2025 உடன் ஒப்பிடும்போது பிப்ரவரியில் குறைந்துள்ளது. இந்த முக்கிய பொருட்களுக்கான குறியீடுகள் 2025 ஜனவரி மாதத்தில் 189.9-ஆகவும், பிப்ரவரி மாதத்தில், 1.74% குறைந்து 186.6-ஆகவும் இருந்தது.
எரிபொருள் & மின்சாரம்: மின்சாரம் (4.28%) மற்றும் தாது எண்ணெய்கள் (1.87%) ஆகியவற்றின் விலை 2025 ஜனவரியுடன் ஒப்பிடும்போது 2025 பிப்ரவரியில் அதிகரித்துள்ளது. இவற்றின் குறியீடுகள் 2025 ஜனவரி மாதத்தில் 150.6-ஆகவும், பிப்ரவரி மாதத்தில் 2.12% அதிகரித்து 153.8-ஆகவும் உள்ளது. நிலக்கரியின் விலை முந்தைய மாதத்தின் குறியீடு அளவிலேயே இருந்தது.
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள்: உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான 22 என்.ஐ.சி இரண்டு இலக்கமாகவும், 17 வகையான பொருட்கள் விலை உயர்வையும் கண்டுள்ளன. இதற்கான குறியீடுகள் 2025 ஜனவரி மாதத்தில் 143.2-ஆகவும், பிப்ரவரி மாதத்தில், 0.42% அதிகரித்து 143.8-ஆகவும் உள்ளது. சில முக்கிய பொருட்கள், பிற பொருட்களின் உற்பத்தி; உணவுப் பொருட்களின் உற்பத்தி; அடிப்படை உலோகங்கள்; ஏனைய உலோகமல்லாத கனிமப்பொருட்கள், இரசாயனப் பொருட்கள் போன்றவை விலை வீழ்ச்சியைக் கண்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111710
***
TS/SV/RJ/KR
(Release ID: 2111764)
Visitor Counter : 24