பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
வேலைவாய்ப்புத் திருவிழா
प्रविष्टि तिथि:
12 MAR 2025 4:51PM by PIB Chennai
2022 அக்டோபர் 22 அன்று வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் தொடங்கி வைத்தார். நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வகையில் இந்தத் திருவிழா அமைந்துள்ளது.
வேலைவாய்ப்புத் திருவிழா, வேலைவாய்ப்பை மேலும் உருவாக்குவதில் கிரியா ஊக்கியாக செயல்படுவதுடன், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேசிய வளர்ச்சியில் நேரடியாக பங்கேற்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள்/பொதுத்துறை நிறுவனங்கள்/சுகாதாரம் மற்றும் கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் நாடு முழுவதும் சுமார் 45-50 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழாக்களுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன, இதில் புதியதாக நியமிக்கப்படும் பல லட்சம் விண்ணப்பதாரர்கள் தங்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
இதுவரை தேசிய அளவில் 14 வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் பணியமர்த்தல் தொடர்பான தரவு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகள் / மத்திய பொதுத்துறை நிறுவனங்களால் பராமரிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்புத் திருவிழாவின் முன்முயற்சியால் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அரசு அமைப்புகள் தங்களது காலியாக உள்ள பணியிடங்களை இயக்க முறையில் நிரப்ப முடிந்தது. இது பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள் மற்றும் வரி அலுவலகங்கள் போன்றவற்றில் உயர்தரமான குடிமக்கள் சேவைகளை வழங்க துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு உதவியாக உள்ளது.
இதுவரை மகாராஷ்டிராவில் 13 வேலைவாய்ப்புத் திருவிழாக்களும், ராஜஸ்தானில் 12 வேலைவாய்ப்புத் திருவிழாக்களும் நடத்தப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110841
***
RB/ DL
(रिलीज़ आईडी: 2111067)
आगंतुक पटल : 49