நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
கட்டாய சான்றிதழின் கீழ், 769 பொருட்களுக்கான 187 தரக்கட்டுப்பாடு ஆணைகளை இந்திய தர நிர்ணய அமைவனம் அறிவித்துள்ளது
Posted On:
12 MAR 2025 6:13PM by PIB Chennai
கட்டாய சான்றிதழின் கீழ், 769 பொருட்களுக்கான 187 தரக்கட்டுப்பாடு ஆணைகளை இந்திய தர நிர்ணய அமைவனம் அறிவித்துள்ளது. இதுபற்றிய முழு விவரங்களும், பட்டியலும் https://www.bis.gov.in/product-certification/products-under-compulsory-certification/ என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
தேவைகள் ஏற்படும் போது, அமைச்சகங்கள் / துறைகளின் கருத்துகளுக்கு இணங்க கட்டாயமான தரக்கட்டுப்பாடு ஆணையின் கீழ், பல்வேறு பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்திய தர நிர்ணய அமைவனத்துடன் கலந்து ஆலோசித்து இந்நிறுவனத்திற்கான சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கட்டாய சான்றிதழுக்குரிய ஆணைகளை அமைச்சகங்களும், துறைகளும் வெளியிடுகின்றன.
மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை இணையமைச்சர் திரு பி எல் வர்மா இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110935
***
TS/SMB/RJ/ DL
(Release ID: 2111018)
Visitor Counter : 13