ஜவுளித்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம்
Posted On:
11 MAR 2025 12:12PM by PIB Chennai
ஜவுளித்துறையில் புத்தொழில்கள், புதிய வணிகங்கள் உட்பட ஜவுளித் தொழில் மேம்பாட்டை நோக்கமாகக்கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் முக்கிய திட்டமான பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளிப் பிராந்தியம் மற்றும் ஆயத்த ஆடை பூங்காக்கள் (பிஎம் மித்ரா) திட்டம் நவீன, உலகத்தரத்திலான தொழில்துறை சூழலை உருவாக்குகிறது. இது முதலீடுகளை ஈர்க்க உதவி செய்வதோடு, வேலைவாய்ப்பையும் அதிகரிக்கிறது.
புத்தொழில்களுக்கான கடன் உத்தரவாத திட்ட அமலாக்கம் என்பது தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்கள் மூலம் புத்தொழில்களுக்கு பிணையம் இல்லாத கடன் கிடைக்க வகை செய்கிறது. இந்தத் திட்டம் தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை நிறுவனத்தால் 2023 ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் அதாவது 2020 முதல் 2024 டிசம்பர் 31 வரையிலான நிலவரப்படி, ஜவுளித் துறையில் 2440 புத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ்சிங் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110113
***
TS/SMB/AG/KR
(Release ID: 2110241)
Visitor Counter : 12