ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: நதிநீர் பாதுகாப்பு முயற்சிகளில் பங்குதாரர்களின் செயல்பாடு

Posted On: 10 MAR 2025 5:53PM by PIB Chennai

ஆறுகள் மற்றும் இதர நீர்நிலைகளில் கலப்பதற்கு முன்பு, கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளை, நிர்ணயிக்கப்பட்ட அளவுகளின்படி சுத்திகரிப்பதை உறுதி செய்வது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முதன்மை பொறுப்பாகும். நாட்டில் உள்ள ஆறுகளின் மாசுபாட்டைக் குறைப்பதற்கான நமாமி கங்கை திட்டம், தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டம் (என்.ஆர்.சி.பி) மற்றும் நகர்ப்புற மாற்றம் மற்றும் புத்துயிரூட்டலுக்கான அடல் இயக்கம் (அம்ருத்) போன்ற திட்டங்கள் மூலம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளை இந்திய அரசு ஆதரித்து வருகிறது.

 

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் நதி மாசுபாட்டைக் குறைப்பதற்கான முயற்சிகளில் உள்ளூர் அதிகாரிகள், சமூகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

 

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் /மாசு கட்டுப்பாட்டு குழுக்கள் , மற்றும் தேசிய தூய்மை கங்கை இயக்கம் ஆகியவை தொழிற்சாலைகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்ற தரநிலைகளை கண்காணித்து, இணங்காத தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கு எதிராக சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 மற்றும் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 ஆகியவற்றின் விதிகளின் கீழ் தண்டனை நடவடிக்கை எடுக்கின்றன.

 

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல் சக்தித் துறை இணையமைச்சர் திரு. ராஜ் பூஷண் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109941

 

***

RB/DL


(Release ID: 2110027) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi