பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நாளை (2025 மார்ச் 11) நடைபெறும் தொண்டு நிறுவனங்களுக்கான நிலைக்குழுவின் 34-வது கூட்டத்திற்கு டாக்டர் ஜிதேந்தர் சிங் தலைமை தாங்குகிறார்
Posted On:
10 MAR 2025 6:46PM by PIB Chennai
நாளை (2025 மார்ச் 11) நடைபெறும் தொண்டு நிறுவனங்களுக்கான நிலைக்குழுவின் 34-வது கூட்டத்திற்கு மத்திய பணியாளர் நலம், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்தர் சிங் தலைமை தாங்குகிறார். ஓய்வூதியர்கள் நலச் சங்கங்கள் அதாவது தொண்டு நிறுவனங்கள் அமைப்பின் ஆலோசனைப் பணியை தொண்டு நிறுவனங்கள் நிலைக்குழு மேற்கொள்கிறது.
இந்த 34-வது கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்கள் புதுச்சேரி, ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஓய்வூதியர் நல சங்கங்கள் பங்கேற்கும்.
ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பற்றி விவாதிப்பதற்காக இந்த கூட்டத்தில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், பாதுகாப்பு கணக்குகளின் தலைமை கணக்காயர் அலுவலகம், செலவினத்துறை, மத்திய ஓய்வூதிய கணக்கு அலுவலகம், ரயில்வே அமைச்சகம், தகவல் தொடர்பு கணக்குகளின் தலைமைக் கணக்காயர் அலுவலகம், அஞ்சல் துறை, நிதிச் சேவைகள் துறை, பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை, தொலை தகவல் தொடர்புத் துறை, இந்திய வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109968
***
TS/SMB/LDN/DL
(Release ID: 2110010)
Visitor Counter : 29