ஜல்சக்தி அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: நாட்டில் தண்ணீர் இருப்பு
Posted On:
10 MAR 2025 5:51PM by PIB Chennai
நீர் மாநில அரசின் பொறுப்பாக இருப்பதால், நீர்வள ஆதாரங்களைப் பெருக்குதல், பாதுகாத்தல் மற்றும் திறமையான மேலாண்மை ஆகியவற்றிற்கான நடவடிக்கைகள் அந்தந்த மாநில அரசுகளால் முதன்மையாக மேற்கொள்ளப்படுகின்றன. மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு உறுதுணையாக மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குகிறது.
நீடித்த நிலத்தடி நீர் மேலாண்மை மூலம் நிலத்தடி நீர் மட்டம் குறைவதைத் தடுக்கும் நோக்கத்துடன், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 80 மாவட்டங்களில் 229 வட்டாரங்களில் உள்ள குடிநீர் நெருக்கடி உள்ள 8203 கிராம பஞ்சாயத்துகளில் கண்டறியப்பட்ட மத்திய அரசின் திட்டமான அடல் நிலத்தடி நீர் (அடல் பூஜல்) திட்டத்தை மத்திய அரசு 01.04.2020 முதல் செயல்படுத்தி வருகிறது.
நுண்ணீர் பாசனம், மாற்றுப்பயிர்கள், நிலத்தடி குழாய்களின் பயன்பாடு, தடுப்பணைகள், பண்ணைக் குட்டைகள், செறிவூட்டும் துளைகள் மற்றும் பிற செயற்கை ரீசார்ஜ் / நீர் சேமிப்பு கட்டமைப்புகள் போன்ற மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளைக் கொண்ட கிராமப் பஞ்சாயத்து வாரியான நீர் பாதுகாப்பு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. அடல் புஜல் யோஜனா திட்டத்தின் 2025-26 பட்ஜெட் மதிப்பீடு ரூ.1780.40 கோடியாகும்.
நீர் பாதுகாப்பு, நிலத்தடி நீரை கட்டுப்படுத்துதல் மற்றும் முறைப்படுத்துதல் மற்றும் மழைநீர் சேகரிப்பு / செயற்கை முறையில் ரீசார்ஜ் செய்தல் போன்றவற்றுக்காக ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் பிற மத்திய அமைச்சகங்களால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல் சக்தி துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷண் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PKV/AG/DL
(Release ID: 2109987)
Visitor Counter : 22