பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
கச்சா எண்ணெய் இறக்குமதியை நாடு சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
10 MAR 2025 3:12PM by PIB Chennai
இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஹைட்ரோகார்பன் ஆய்வுப் பணி மற்றும் உரிமக் கொள்கை, 2016.
தேசிய தரவு தொகுப்பு அமைத்தல், 2017.
எண்ணெய் மற்றும் எரிவாயு மீட்பு முறைகளை மேம்படுத்தவும், ஊக்குவிப்பதற்கான கொள்கை 2018.
இயற்கை எரிவாயு விற்பனை சீர்திருத்தங்கள், 2020.
கடலோரப் பகுதிகளில் பல ஆண்டுகளாக ஆய்வுக்காக தடைப்பட்டிருந்த சுமார் 1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் தூரத்தை விடுவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
2021 நவம்பர், 2022 மே ஆகிய இரண்டு தவணைகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே லிட்டருக்கு ரூ.13 மற்றும் ரூ.16 ஆக மத்திய அரசு குறைத்தது, இது முழுமையாக நுகர்வோருக்கு வழங்கப்பட்டது. சில மாநில அரசுகளும் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வாட் விகிதங்களைக் குறைத்தன. 2024 மார்ச் மாதத்தில், நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலையை லிட்டருக்கு தலா ரூ.2 குறைத்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியை பன்முகப்படுத்துவதன் மூலம் அதிகரித்த சர்வதேச விலைகளிலிருந்து சாமானிய குடிமக்களை பாதுகாக்குதல், பெட்ரோல் கிடைப்பதை உறுதி செய்ய உலகளாவிய சேவை கடமை விதிகளை பின்பற்றுதல், உள்நாட்டு சந்தையில் டீசல், பெட்ரோலில் எத்தனால் கலப்பது அதிகரிப்பு போன்றவை.
மாநிலங்களுக்கு உள்ளேயே தொலைதூர பகுதிகளில் வசிக்கும் நுகர்வோர்களுக்கு பயனளிக்கும் வகையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு சீரமைப்பு. இந்த முயற்சி ஒரு மாநிலத்திற்குள் பெட்ரோல் அல்லது டீசலின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச சில்லறை விலைகளுக்கு இடையிலான வித்தியாசத்தையும் குறைத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 10.33 கோடிக்கும் அதிகமான பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் பயனாளிகளுக்கு மானிய விலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109841
-----
TS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2109901)
आगंतुक पटल : 46