பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
'மகளிர் சக்தியினால் வளர்ந்த இந்தியா' மாநாட்டில், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் முக்கிய பங்கை குடியரசுத்தலைவர் வலியுறுத்தினார்
प्रविष्टि तिथि:
08 MAR 2025 8:12PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த 'மகளிர் சக்தியினால் வளர்ந்த இந்தியா’ என்ற கருப்பொருளிலான தேசிய அளவிலான மாநாட்டுடன் இந்திய அரசு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, சட்டம் மற்றும் நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் மற்றும் இதர பிரமுகர்கள் முன்னிலையில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவின்போது இந்தியாவின் முன்னேற்றத்தை வடிவமைக்கும் பெண்களின் எழுச்சியூட்டும் கதைகளைக் கொண்ட பெண்கள் தலைமையிலான வளர்ச்சி குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சட்டமன்றத் துறையால் வெளியிடப்பட்ட 'அரசியல் நிர்ணய சபையின் பெண் உறுப்பினர்களின் வாழ்க்கையும் பங்களிப்பும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் முக்கிய பங்களிப்பை வலியுறுத்தினார். "பாரபட்சம் அல்லது தடைகள் இல்லாமல் பெண்கள் தொழிலாளர் தொகுப்பில் பங்கேற்க முடிந்தால் மட்டுமே வளர்ந்த பாரதம் சாத்தியமாகும். பெண்கள் வேலையை விட குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பார்கள் என்ற கருத்து சவால் செய்யப்பட வேண்டும், ஏனென்றால் எதிர்கால சந்ததியினரை வளர்ப்பது ஒரு பகிரப்பட்ட சமூகப் பொறுப்பு. ஒவ்வொரு பெண்ணும் தனது கனவுகளை பயமோ கட்டுப்பாடோ இல்லாமல் தொடரக்கூடிய சூழலை உருவாக்குவதில்தான் உண்மையான முன்னேற்றம் அடங்கியுள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது நியாயம் மட்டுமல்ல; இது ஒரு வலுவான, மிகவும் வளர்ந்த தேசத்தை உருவாக்குவதைப் பற்றியது”, என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2109520
****
RB/DL
(रिलीज़ आईडी: 2109699)
आगंतुक पटल : 36