தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய தெற்கின் தேசிய மனித உரிமைகள் அமைப்புகளின் மனித உரிமைகள் குறித்த இந்தியாவின் இரண்டாவது ஐ.டி.இ.சி நிர்வாக திறன் மேம்பாட்டுத் திட்டம் நிறைவடைந்தது

Posted On: 08 MAR 2025 7:56PM by PIB Chennai

வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.ஹெச்.ஆர்.சி) ஏற்பாடு செய்திருந்த உலகளாவிய தெற்கின் தேசிய மனித உரிமைகள் அமைப்புகளின் மூத்த அதிகாரிகளுக்கான மனித உரிமைகள் குறித்த 2-வது ஆறு நாள் ஐ.டி.இ.சி நிர்வாக திறன் மேம்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. நிறைவு விழாவில் உறுப்பினர்கள் நீதியரசர் (டாக்டர்) பித்யுத் ரஞ்சன் சாரங்கி, திருமதி விஜய பாரதி சயானி மற்றும் பொதுச் செயலாளர் திரு பாரத் லால் ஆகியோர் முன்னிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இந்தியத் தலைவர் நீதிபதி திரு வி.ராமசுப்பிரமணியன் உரையாற்றினார்.

மார்ச் 3, 2025 திங்கட்கிழமை தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், மடகாஸ்கர், உகாண்டா, திமோர் லெஸ்டே, டி.ஆர் காங்கோ, டோகோ, மாலி, நைஜீரியா, எகிப்து, தான்சானியா, புருண்டி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் 11 தேசிய மனித உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்த 35 மூத்த செயல்பாட்டாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நபர்கள் மற்றும் துறை வல்லுநர்களுடன் ஊடாடும் அமர்வுகள் நடைபெற்றன, மேலும் பங்கேற்பாளர்கள் இந்திய மக்கள் அனுபவிக்கும் குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகள் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தினர். 

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி திரு.வி.ராமசுப்பிரமணியன் பேசுகையில், அறிவின் சுதந்திரமான பரிமாற்றம் ஒரு சிறந்த உலகத்தின் அடித்தளம் என்று வலியுறுத்தி, பூமியில் ஒரு நியாயமான மற்றும் இணக்கமான சமூகத்தை உருவாக்கும் சக்தி மனிதகுலத்திற்கு உள்ளது என்று கூறினார். ரிக் வேதத்தை மேற்கோள் காட்டி, அனைத்து திசைகளிலிருந்தும் உன்னத சிந்தனைகளை வரவேற்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், அனைவரின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதே அனைத்து மனித முயற்சிகளின் இறுதி நோக்கம் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

  
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2109515
 

*****

RB/DL


(Release ID: 2109697) Visitor Counter : 10


Read this release in: English , Urdu , Hindi