பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
ஐஐசிஏ சான்றளிக்கப்பட்ட ஈஎஸ்ஜி நிபுணத்துவ - தாக்கத் தலைவர் திட்டத்தை (பேட்ச்-IV) துவக்குகிறது
Posted On:
09 MAR 2025 4:43PM by PIB Chennai
இந்தியாவின் சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் (ஈஎஸ்ஜி), சுற்றுச்சூழலை வலுப்படுத்துவதற்கும், பொறுப்பான வணிக நடைமுறைகளை வளர்ப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக, மத்திய அரசின் பெருவணிக நிறுவன விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய பெருவணிக நிறுவன விவகாரங்கள் நிறுவனம் (ஐஐசிஏ), சான்றளிக்கப்பட்ட ஈஎஸ்ஜி நிபுணத்துவ - தாக்கத் தலைவர் திட்டத்தின் தொகுதி IV- ஐ இன்று ஒரு மெய்நிகர் விழாவில் துவக்கியது. இந்த முதன்மையான முன்முயற்சி ஈஎஸ்ஜி தலைமை மற்றும் ஒழுங்குமுறை நிபுணத்துவத்தை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய தளமாக செயல்படுகிறது, பொறுப்பான வணிக நடத்தை மற்றும் முதலீட்டு உத்திகளை வணிகங்களின் டிஎன்ஏவில் ஒருங்கிணைத்து உள்வாங்குவதற்கு தேவையான திறன்களுடன் நிபுணர்களை சித்தப்படுத்துகிறது.
ஐஐசிஏ வணிக சூழல் பள்ளி திட்ட இயக்குநர் மற்றும் தலைவர் பேராசிரியர். கரிமா தாதிச் , ஐஐசிஏ தலைமை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர். அஜய் பூஷன் பிரசாத் பாண்டே உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா அதன் பருவநிலை மற்றும் நிலைத்தன்மை இலக்குகளை சந்திக்க 2.5 டிரில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று திரு பாண்டே குறிப்பிட்டார். நிலையான நிதி, பசுமைப் பத்திரங்கள் மற்றும் தாக்க முதலீடு ஆகியவை இந்த முதலீட்டு இடைவெளியைக் குறைப்பதில் முக்கிய உதவியாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் ஈஎஸ்ஜி தலைமையிலான பொருளாதார மாற்றங்களில் பெருநிறுவன பங்கேற்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
தொடக்க உரையை நிகழ்த்திய பெருவணிக நிறுவன விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு இந்தர்தீப் சிங் தாரிவால், ஈஎஸ்ஜி என்பது இனி ஒரு விருப்பமல்ல, ஆனால் வளர்ந்து வரும் உலகளாவிய நிலப்பரப்பில் வணிகங்கள் போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டிய அவசியம் என்று வலியுறுத்தினார்.
செபியின் செயல் இயக்குனர் திரு பிரமோத் ராவ், ஈஎஸ்ஜி வெளிப்பாடுகள், நிலைத்தன்மை-இணைக்கப்பட்ட முதலீடுகள் மற்றும் ஈஎஸ்ஜி மதிப்பீடுகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான செபியின் தற்போதைய முயற்சிகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109651
*****
PKV /DL
(Release ID: 2109690)
Visitor Counter : 17