பாதுகாப்பு அமைச்சகம்
முப்படைகளின் தளபதி அனில் சௌகான் அவுஸ்திரேலிய பயணத்தை நிறைவு செய்தார்
प्रविष्टि तिथि:
08 MAR 2025 5:11PM by PIB Chennai
முப்படைகளின் தலைமைத் தளபதி (சி.டி.எஸ்) ஜெனரல் அனில் சௌகான் 2025 மார்ச் 04 முதல் 07 வரை ஆஸ்திரேலிய பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். விரிவான உத்திசார் ஒத்துழைப்பின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் கூட்டு செயல்பாட்டை இந்தப் பயணம் வலுப்படுத்தியது. பிராந்திய பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்புக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இப்பயணம் வலியுறுத்தியது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, கூட்டு பயிற்சிகள், திறன் வளர்ப்பு, பாதுகாப்பு தொழில்நுட்ப பரிமாற்றம், புதிய இருதரப்பு பாதுகாப்பு முயற்சிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவரது பயணத்தின் போது, ஜெனரல் சௌகானுக்கு ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் அலுவலகத்தில் பாரம்பரிய வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கு அவர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் அட்மிரல் டேவிட் ஜோன்ஸ்டன், தளபதிகளுடன் உயர்மட்ட கலந்துரையாடல்களை நடத்தினார்.
தொழில்முறை ராணுவ கல்விப் பயிற்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, ஜெனரல் சௌகான் ஆஸ்திரேலிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம் செய்தார். அங்கு தொழில்முறை இராணுவ கல்வியை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார்.
அறிவுசார், கொள்கை பரிமாற்றங்களை மேம்படுத்தும் வகையில், ஆஸ்திரேலியாவின் முதன்மையான சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடியூட்டில் ஒரு வட்ட மேசை விவாதத்திற்கு திரு அனில் சௌகான் தலைமை தாங்கினார். அவரது இந்தப் பயணம் இந்தியா-ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பில், பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலை மேம்படுத்தியுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தியுள்ளது.
*****
PLM /DL
(रिलीज़ आईडी: 2109495)
आगंतुक पटल : 310