திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
மக்கள் சக்திக்கான முதலீடானது கல்வி, திறன், சுகாதாரம் ஆகிய மூன்று தூண்கள் மீது வலுவாக உள்ளது -திரு நரேந்திர மோடி
Posted On:
06 MAR 2025 6:31PM by PIB Chennai
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திறன் மேம்பாட்டுக்கான தேசிய சிறப்பு மையங்கள் என்ற தலைப்பில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது. பட்ஜெட் அறிவிப்புகளை திறம்பட செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இக் கருத்தரங்கில் மாநில அரசுகள், தொழில்துறை நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கருத்தரங்கில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சக செயலாளர் திரு அதுல் குமார் திவாரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அந்த அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் திருமதி அர்ச்சனா மாயாராம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஒடிசா உலக திறன் மேம்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி ரஷ்மிதா பாண்டா, கர்நாடக அரசின் திறன் மேம்பாட்டு மையம், தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கான பயிற்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் திருமதி ராகப்ரியா, குஜராத் அரசின் தொழிலாளர், திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புத் துறை செயலாளர் டாக்டர் வினோத் ராவ், உலக வங்கியின் முன்னணி கல்வி நிபுணர் திருமதி சியாவோயன் லியாங், சிங்கப்பூர் கல்வி ஆலோசனைக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் பங்குதாரர் திரு என் வரபிரசாத், ஐடிஇ கல்வி சேவைகளின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சுரேஷ் நடராஜன், சிங்கப்பூர் போட்டித்திறன் நிறுவனத்தின் தலைவர் திரு அமித் கபூர், டாடா இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கில்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி திரு சபியாசாச்சி தாஸ், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் திறன் மேம்பாட்டுத் தலைவர் திரு சுதர்சன் மற்றும் ஜம்மு காஷ்மீர் சிமெண்ட்ஸ் லிமிடெட் தொழிற்கல்வி மற்றும் திறன் தலைவர் திரு ஆஷிஷ் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108876
------
TS/SV/KPG/DL
(Release ID: 2108915)
Visitor Counter : 23