தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
குஜராத், ஒடிசா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 9 நகரங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்த அறிக்கையை ட்ராய் வெளியிட்டுள்ளது
Posted On:
05 MAR 2025 12:12PM by PIB Chennai
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) கீழ் செயல்படும் முகமைகள் வாயிலாக ஒன்பது நகரங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே வழித்தடங்களில் தொலைத் தொடர்பு சேவைகளின் செயல்பாடுகள் குறித்த சோதனைகள் நடத்தப்பட்டன. அலிகார் முதல் மீரட் வரை, டேராடூன் ரயில் வழித்தடம் உபி-மேற்கு உரிமம் உள்ள பகுதிகள், புவனேஸ்வர், ஒடிசா, ஜம்மு, முதல் ஸ்ரீநகர் நெடுஞ்சாலை, லக்னோ, ஃபதேபூர் முதல் வாரணாசி நெடுஞ்சாலை, நவி-மும்பை, ராய்ப்பூர், சிலிகுரி, டார்ஜிலிங், கலிம்போங், திருவனந்தபுரம் வாபி-ரேவாரி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. குரல் மற்றும் தரவு சேவைகளுக்கான மொபைல் தொலைபேசி சேவையின் தரத்தை மதிப்பிடுவதற்கு 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சோதனைகள் நடத்தப்பட்டன.
ஐடிடி தளத்தில், குரல் மற்றும் தரவுகளுக்கான பல்வேறு தொழில்நுட்பங்கள் (2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி போன்றவை) மூலம் உரிமம் பெற்ற பகுதிகளில் சேவைகளை வழங்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களின் அலைபேசி சேவைகளுக்கான செயல்திறன் சோதனை நடத்தியதன் மூலம் அதன் தரம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த சோதனைகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கைகளில் உரிமம் வழங்கப்பட்ட பகுதிகளில் அலைபேசி சேவையின் செயல்திறன் தொடர்பான மதிப்பீடுகள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108308
----
TS/SV/KPG/DL
(Release ID: 2108616)
Visitor Counter : 8