பாதுகாப்பு அமைச்சகம்
இலகுரக போர் விமானமான தேஜஸ் விமானத்தில் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட உயிர் காக்கும் அமைப்பு முறைகளை அதிக உயரத்திலிருந்து டிஆர்டிஓ சோதித்துப் பார்க்கிறது
Posted On:
05 MAR 2025 12:37PM by PIB Chennai
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) கீழ் பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஆய்வு நிறுவனமான பாதுகாப்பு உயிரி- பொறியியல் மற்றும் மின் மருத்துவ ஆய்வகமானது (டிஇபிஇஎல்) இலகு ரக போர் விமானமான தேஜாஸ் விமானத்திற்கான உள்நாட்டு ஆன்-போர்டு ஆக்ஸிஜன் ஜெனரேட்டிங் சிஸ்டம் (ஓபிஓஜிஎஸ்) அடிப்படையிலான ஒருங்கிணைந்த உயிர் காக்கும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து மார்ச் 4-ம் தேதியன்று விண்ணில் உயரமான இடத்திலிருந்து வெற்றிகரமாக பரிசோதனை நடத்திப் பார்த்தது.
இந்த ஆக்சிஜன் உருவாக்கக் கருவிகள் விமானப் பயணத்தின்போது விமானிகள் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை உருவாக்கவும் ஒழுங்குபடுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன அமைப்பாகும். இது திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர் அடிப்படையிலான அமைப்புகளைச் சார்ந்திருப்பதை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் முகமையின் இலகு ரக போர் விமானங்களின் மாதிரி விமானத்தில் இந்தக் கருவிகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. கடல் மட்டத்திலிருந்து 50,000 அடி உயரம் வரை சென்று சோதனை நடத்தப்பட்டதில், இந்தக் கருவிகளின் செயல்பாடுகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைப் பூர்த்தி செய்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108329
----
TS/SV/KPG/KR
(Release ID: 2108395)
Visitor Counter : 38