அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் தேசிய அறிவியல் தின கொண்டாட்டங்களில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்

Posted On: 03 MAR 2025 5:27PM by PIB Chennai

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் தேசிய அறிவியல் தின கொண்டாட்டங்களில், மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்தியா ஜப்பான் இடையே அறிவியல் தொழில்நுட்பத்தில் வெற்றிகரமான ஒத்துழைப்பின் 40 ஆண்டுகளை சுட்டிக்காட்டிய அமைச்சர், 2025 26 இந்தியா ஜப்பான் இடையே அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு பரிமாற்றத்திற்கான ஆண்டாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றார்.

இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் அடித்தளம் வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா ஜப்பான் இடையேயான அறிவியல் தொழில்நுட்ப கூட்டுக்குழுவின் 11வது கூட்டம் 2025 ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டம் இரு நாடுகளுக்கிடையே உள்ள முழு ஆற்றலை கண்டறிவதற்கான புதிய முன்முயற்சிகள் பற்றியும், நடைமுறையில் உள்ள ஒத்துழைப்பு பற்றியும் ஆய்வு செய்யும்.

ஜப்பானின் அறிவியல் தொழில்நுட்ப முகமையுடன் இணைந்து, எதிர்கால தொழில்நுட்ப கூட்டுத் திட்டங்களில் முன்னணியில் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். உலகளாவிய நாளைய சவால்களை சமாளிப்பதற்கு இந்த துறைகளிலான ஒத்துழைப்பு முக்கியமானதாகும் என்று டாக்டர் சிங் கூறினார்.

இந்தியா ஜப்பான் இடையேயான எதிர்கால ஒத்துழைப்பில் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று தெரிவித்த அவர், இதன்மூலம் கூட்டான மேற்பார்வையிடலும், உள்ளகப் பயிற்சிகளும் ஜப்பானில் நடைபெறும் என்று தெரிவித்தார். திறமைமிக்க பெண் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்தியாவின் விண்வெளித்துறை தற்போது தனியார் துறை முதலீடுகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர், ஜப்பான் உள்ளிட்ட உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு இது புதிய வாய்ப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது என்றார். அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அரசு சாரா நிறுவனங்களுக்கு அணுசக்தி துறை திறக்கப்படும் என்ற துணிச்சல்மிக்க முடிவு அறிவிக்கப்பட்டிருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இது முன் எப்போதும் இல்லாத நடவடிக்கை என்று குறிப்பிட்ட அவர், இதன்மூலம் இந்தியாவில் சிறிய வகையிலான ஈனுலைகள் தயாரிக்க அனுமதி வழங்கப்படும் என்றும், இது நாட்டின் எரிசக்தி துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107794

***

TS/SMB/LDN/DL


(Release ID: 2107895) Visitor Counter : 10


Read this release in: English , Urdu , Hindi