அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஹைட்ரஜன் அடிப்படையிலான எரிபொருள் மின் கலன்கள் பயன்பாடு
Posted On:
03 MAR 2025 5:33PM by PIB Chennai
தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு ஹைட்ரஜன் எரிபொருள் அடிப்படையிலான மின்கலங்களை உருவாக்கி மின் சேமிப்பு தீர்வு வழங்குவது என்பது தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுக்கு உதவிகரமாக இருக்கும். அதே நேரத்தில் இது லட்சக்கணக்கான மக்களுக்கு தடையற்ற மின்இணைப்பை உறுதி செய்வதோடு தொலைத் தொடர்புத் துறையில் தூய்மை எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் செய்கிறது.
இந்தியாவில் பத்து லட்சத்துக்கும் அதிகமான தொலைத் தொடர்பு கோபுரங்கள் உள்ளன. தொலைதூரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு கோபுரங்களில் வரையறுக்கப்பட்ட மின்விநியோக வசதிகள் காரணமாக வாரத்துக்கு ஏழு நாட்கள் மற்றும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என எப்போதும் செயல்பாடுகளை பராமரிப்பது சவாலான விஷயமாக உள்ளது. பாரம்பரிய எரிபொருள் பயன்பாடு கொண்ட, டீசல் ஜெனரேட்டர்கள் அதிக விலை கொண்டவையாகவும் மற்றும் கணிசமான அளவிற்கு கரியமில வாயுவை வெளியேற்றுவதாகவும் உள்ளன.
புரோட்டான் பரிமாற்ற சவ்வு எனப்படும் எரிபொருள் மின்கலன் என்பது தொலைத்தொடர்பு கோபுரங்களை இயக்குவதற்கான திறன் வாய்ந்த தூய்மையான எரிசக்தி தீர்வாகும். குறிப்பாக மின் வழித்தட செயலிழப்புகளின் போது மாற்று முறையில் இந்த எரிபொருள் மின்கலங்கள் மின்சாரத்தை மிகவிரைவாக வழங்க வகை செய்கின்றன. ஒப்பீட்டளவில் குறைந்த வெப்பநிலையில் இந்த செல்கள் செயல்படும் தன்மை கொண்டவை. அவை டீசல் ஜெனரேட்டர் போன்றவற்றுக்கு மாற்றாக அமைகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107798
----
TS/SV/KPG/DL
(Release ID: 2107830)