நிதி அமைச்சகம்
புது தில்லியில் 49வது சிவில் கணக்கு தினம் கொண்டாடப்பட்டது.
प्रविष्टि तिथि:
01 MAR 2025 6:29PM by PIB Chennai
இந்திய சிவில் கணக்கு பணியின் (ஐசிஏஎஸ்) 49வது நிறுவன நாளைக் குறிக்கும் வகையில், சிவில் கணக்கு தினம் 2025, புதுதில்லியில் கொண்டாடப்பட்டது. மத்திய நிதி மற்றும் பெரு வணிக நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார்.
நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை செயலாளர் டாக்டர் மனோஜ் கோவில், தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளர் திரு ஷியாம் எஸ். துபே ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்திய சிவில் கணக்கு அமைப்பின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இந்திய அரசின் நிதி ஆலோசகர்கள், செலவினத் துறை மற்றும் பிற அமைச்சகங்கள் / இந்திய அரசின் துறைகளின் மூத்த அதிகாரிகள், ஓய்வுபெற்ற ஐசிஏஎஸ் அதிகாரிகள், வங்கிகள் மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உட்பட பலர் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
தொடக்க விழாவின் போது, மத்திய நிதியமைச்சர் பொது நிதி மேலாண்மை அமைப்பு பற்றிய தொகுப்பையும் வெளியிட்டார்.
இந்திய சிவில் கணக்குகள் அமைப்பின் பரிணாமம் மற்றும் சாதனைகள் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர், நிர்வாகத்தின் முக்கிய இலக்குகளை அடைவதில் பொது நிதி மேலாண்மை அமைப்பு (பிஎஃப்எம்எஸ்) ஆற்றிய பங்கை அங்கீகரித்தார்> 60 கோடி பயனாளிகளுக்கு பயனளிக்கும் கடைசி மைலை எட்டுவது, 1100 டிபிடி திட்டங்களை உள்ளடக்கிய 1200 க்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாநில திட்டங்களை நேரடியாக வழங்குதல் இதில் அடங்கும்.
31 மாநில கருவூலங்கள் மற்றும் 40 லட்சம் திட்டங்களை செயல்படுத்தும் முகமைகளின் ஒருங்கிணைப்பு மூலம் கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்துவதற்கு பிஎஃப்எம்எஸ் வழிவகுத்துள்ளது என்று திருமதி சீதாராமன் கூறினார்.
பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் - தடையற்ற நிதி பரிமாற்றங்களை எளிதாக்கும் 650 நிதி நிறுவனங்களுடன் பிஎஃப்எம்எஸ் கட்டமைப்பு செயல்படுகிறது என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார். பிஎஃப்எம்எஸ் பரிவர்த்தனைகளின் அளவு 2015 இல் 2 கோடி செலுத்துதலில் இருந்து 2024 இல் 250 கோடியாக அதிவேகமாக உயர்ந்துள்ளது.
தொடக்க அமர்வைத் தொடர்ந்து சிறப்புரையை 16வது நிதி ஆணையத்தின் தலைவர் டாக்டர். அரவிந்த் பனகாரியா, "உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியா: அடுத்த தசாப்தம் " என்ற தலைப்பில் ஆற்றினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107352
***
PKV/KV
(रिलीज़ आईडी: 2107401)
आगंतुक पटल : 88