சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சர்வதேச சக்கர நாற்காலி தினத்தில் சுகம்யா யாத்ராவுக்கு தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது
प्रविष्टि तिथि:
01 MAR 2025 6:35PM by PIB Chennai
சர்வதேச சக்கர நாற்காலி தினம் 2025-ஐ முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையால் சுகம்யா யாத்திரை என்ற யாத்திரை இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. சக்கர நாற்காலி பயனர்களுடன் தொடர்புடைய கட்டுக்கதைகளை உடைத்தல், அணுகலை ஊக்குவித்தல், சமூகத்தில் உள்ளடக்கத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த யாத்திரை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முயற்சிக்கு பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா மாற்றுத் திறனாளிகள் தேசிய நிறுவனம், இந்திய சைகை மொழி ஆராய்ச்சி, பயிற்சி மையம், தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஆகியவை ஆதரவு அளித்தன. பல்வேறு நிறுவனங்களின் மாணவர்கள் ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சக்கர நாற்காலி பயனர்கள் எதிர்கொள்ளும் நிஜ வாழ்க்கை சவால்களை மக்கள் புரிந்துகொள்ள இது ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஊனமுற்றோர் அல்லாத நபர்கள் சவால்களின் நேரடி அனுபவத்தைப் பெற சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தினர்.
***
PLM/KV
(रिलीज़ आईडी: 2107399)
आगंतुक पटल : 72