அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசிய அறிவியல் தினம் 2025
Posted On:
27 FEB 2025 1:40PM by PIB Chennai
கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் சங்கத்தின் ஆய்வகத்தில் பணிபுரிந்து புகழ்பெற்ற இயற்பியலாளர் சர் சி.வி.ராமன் கண்டுபிடித்த 'ராமன் விளைவை' நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கண்டுபிடிப்பிற்காக, அவருக்கு 1930-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. தேசிய அறிவியல் தினத்தன்று, அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. முதலாவது அறிவியல் தினம் 1987-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி கொண்டாடப்பட்டது. எதிர்காலத் தலைமுறையினருக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் என்ற கருபொருளில் அறிவியல் தினம் கொண்டாடப்பட உள்ளது. உலக அளவில் இந்தியாவின் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் வகையிலும் வளர்ச்சியடைந்த தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்ட வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப நாட்டின் அறிவியல், தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்வதில் இளைஞர்களின் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படவுள்ளது.
அறிவியலின் முக்கியத்துவம், அதன் பயன்பாடு குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடைபெறும் அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது .
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106574
---
TS/SV/KPG/KR
(Release ID: 2106613)
Visitor Counter : 39