பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியின தொழில்முனைவோருக்கு உதவும் வகையில், தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இமாச்சலப் பிரதேச தோட்டக்கலை உற்பத்தி சந்தைப்படுத்தல் மற்றும் செயல்படுத்துதல் கழகத்துடன் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது
प्रविष्टि तिथि:
25 FEB 2025 4:08PM by PIB Chennai
பழங்குடியின தொழில்முனைவோருக்கு உதவும் வகையில், தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஎப்டி), இமாச்சலப் பிரதேச தோட்டக்கலை உற்பத்தி சந்தைப்படுத்தல் மற்றும் செயல்படுத்துதல் கழகத்துடன் (எச்பிஎம்சி) இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (டிரைஃபெட்) புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. புதுதில்லியில் பிப்ரவரி 24-ம் தேதி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வர்த்தகர்களுக்கு இடையேயான அணுகுமுறையை அமல்படுத்தவும், பழங்குடியினர் விளைபொருட்கள் சந்தையை விரிவுபடுத்தவும் இது முக்கிய நடவடிக்கையாகும்.
2025 பிப்ரவரி 16 முதல் 24 வரை தேசிய தலைநகரில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற 'ஆதிப் பெருவிழா 'என்ற தேசிய பழங்குடியினர் திருவிழான்போது டிரைஃபெட் நிர்வாக இயக்குநர் திரு ஆஷிஷ் சாட்டர்ஜி மற்றும் என்ஐஎப்டி தலைமை இயக்குநர் திருமதி தனு காஷ்யப் ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. என்ஐஎப்டி புரிந்துணர்வு ஒப்பந்தம் டிரைஃபெட் பொது மேலாளர் திரு சந்தீப் பஹல்வான் மற்றும் என்ஐஎப்டி தலைமை அலுவலக இயக்குநர் திரு கவுரவ் மிஸ்ரா இடையே கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டது. எச்பிஎம்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் டிரைஃபெட் பொது மேலாளர் திருமதி மம்தா சர்மா மற்றும் எச்பிஎம்சி பொது மேலாளர் திரு சன்னி சர்மா இடையே கையெழுத்திடப்பட்டு பரிமாறப்பட்டது.
பழங்குடியின கைவினைஞர்களின் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு உதவுவதே என்.ஐ.எஃப்.டி உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106121
***
TS/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2106171)
आगंतुक पटल : 52