குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தின் 65-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் ஆற்றிய உரை (பகுதிகள்)
Posted On:
22 FEB 2025 7:27PM by PIB Chennai
இந்த பல்கலைக்கழகத்தில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அதற்கு இரண்டு சிறப்புக் காரணங்கள் உள்ளன.
ஒன்று, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகம் என்ற இந்தப் பல்கலைக்கழகத்தின் பெயர் அனைத்தையும் சொல்லும், அது அமைந்துள்ள நகரமும் மிக முக்கியமானதாகும். இந்த இரண்டு விஷயங்களும் நமது நிலையை வரையறுக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில், பாரதம் வளர்ச்சி, அதிவேக பொருளாதார உயர்வு, தனித்துவமான உள்கட்டமைப்பு எழுச்சி, ஆழமான டிஜிட்டல்மயமாக்கல், உலகளவில் அறியப்படாத அளவிலான தொழில்நுட்ப ஊடுருவல் ஆகியவற்றைக் கண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உலகில் வேறு எந்த நாடும் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் பாரதம் அளவுக்கு வேகமாக வளர்ந்ததில்லை. நமது பொருளாதாரத்தில் நாம் அடைந்துள்ள முன்னேற்றங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துப் பார்க்க முடியாதவை. உலகப் பொருளாதார அந்தஸ்தில் 10வது அல்லது 11வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். மேலும் ஓராண்டில் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் பாதையில் உள்ளோம்.
நமது இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன, இது உங்களுக்கான முறை. ஜனநாயகத்தில் மிக முக்கியமான பங்குதாரர் நீங்கள். நமது வளர்ந்த பாரதம் இனி ஒரு கனவு அல்ல, அது நமது நோக்கம். நாம் அனைவரும் அந்த இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். 2047-இல் பாரதம் தனது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் போது, இந்தியா ஒரு வளர்ந்த நாடாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
நாம் நமது தனிநபர் வருமானத்தை எட்டு மடங்கு அதிகரிக்க வேண்டும், எனவே நாம் அனைவரும் வேகமாக முன்னேற வேண்டும், அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும், அந்த அர்ப்பணிப்புடன் நாம் முதலில் நமது தேசத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தேசம் எப்போதும் முதன்மையானதாக இருக்க வேண்டும். தனிநபர் நலனுக்கும், ஒருதலைபட்சமான நலனுக்கும், வர்த்தக நலனுக்கும் தேச நலனை நாம் அடிபணிய வைக்க முடியாது. தேசியவாதத்திற்கான அர்ப்பணிப்பு பேச்சுவார்த்தைக்கு இடமில்லாதது, ஏனெனில் அது நமது சுதந்திரத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, உங்கள் பங்களிப்பை பெரிய அளவில் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். தனிநபர்கள் தங்கள் ஒழுக்கத்தால், தங்கள் கண்ணியத்தால், நல்ல குடிமக்களாக இருப்பதன் மூலம் ஒரு தேசத்தை வரையறுக்கிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105547
*************
BR/KV
(Release ID: 2105630)
Visitor Counter : 8