விவசாயத்துறை அமைச்சகம்
புதுதில்லியில் நாளை நடைபெறும் வேளாண் அறிவியல் கண்காட்சி தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்கிறார்
Posted On:
21 FEB 2025 3:53PM by PIB Chennai
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் - இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வேளாண் அறிவியல் 2025 கண்காட்சி நாளை தொடங்கி வரும் 24ம் தேதிவரை புதுதில்லியில் நடைபெறுகிறது.
தொடக்க விழாவின் தலைமை விருந்தினராக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் கலந்து கொள்கிறார்.
"மேம்பட்ட வேளாண்மை-வளர்ச்சியடைந்த இந்தியா" என்ற கருப்பொருள் அடிப்படையில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியின் போது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய பயிர் வகைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து நேரடி செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.
பருவநிலை விவசாயம், டிஜிட்டல் விவசாயம், இளைஞர்கள் மற்றும் மகளிர் தொழில்முனைவோர் மேம்பாடு; விளை பொருட்களை சந்தைப்படுத்தல் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளிடையே கலந்துரையாடல்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 24ம் தேதி நடைபெறும் இந்த கண்காட்சியின் நிறைவு விழாவில் தலைமை விருந்தினர்களாக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர்கள் திரு.ராம்நாத் தாக்கூர் மற்றும் திரு.பகீரத் சவுத்ரி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105262
***
TS/GK/AG/KR
(Release ID: 2105310)
Visitor Counter : 24