அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் தற்காலப் போக்குகள் : மருந்து ஆராய்ச்சி குறித்த 9-வது சர்வதேச கருத்தரங்கு
Posted On:
20 FEB 2025 1:30PM by PIB Chennai
மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் தற்காலப் போக்குகள் குறித்த 9-வது சர்வதேச கருத்தரங்கு லக்னோவில் உள்ள சிஎஸ்ஐஆர் – மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மகா நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த பிரமுகர்களை இந்நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ராதா ரங்கராஜன் வரவேற்றார். மிக முக்கியமான இந்த கருத்தரங்கு விவரங்களை எடுத்துரைத்த அவர், கற்றல், ஒருங்கிணைப்பு, மேம்படுத்துதல் ஆகியவற்றில் தங்களின் ஆராய்ச்சி திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கு இந்த கருத்தரங்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
இந்தக் கருத்தரங்கின் தலைமை விருந்தினராக சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநரும் அறிவியல் மற்றும் தொழில்கள் ஆராய்ச்சித் துறை செயலாளருமான டாக்டர் என். கலைசெல்வி பங்கேற்று உரையாற்றினார். அறிவு பரிமாற்றத்திற்கான இந்த சர்வதேச கருத்தரங்கின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இத்தகைய மகத்தான சந்திப்பானது ஆராய்ச்சியாளர்களுக்கும் தொழில்துறை தலைவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மருந்து உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொள்வதற்கும், அதில் ஒத்துழைப்பதற்கும் வாய்ப்புகளை வழங்குவதாகத் தெரிவித்தார். அறிவியலுக்கு எல்லைகள் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த நிகழ்வு உலகளாவிய ஒத்துழைப்புக்கான நுழைவாயில் என்றார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை அவர் அடிக்கோடிட்டு காட்டினார். இந்த விவாதங்களில் இருந்து மாணவர்கள் ஊக்கம் பெற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், 2047-க்குள் அறிவியல் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைமை நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்தக் கருத்தரங்கில் ஐசிஎம்ஆர்-ன் முன்னாள் தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா, ப்ளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியர் கிரிஸ்டோபர் ராபர்ட் மெக்கர்தி, மினெசோட்டா பல்கலைக்கழகப் பேராசிரியர் கோர்ட்னி சி அல்ரிச், சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் பணியாற்றும் டாக்டர் அரிந்தம் தாலுக்தார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104910
***
TS/SMB/RJ/DL
(Release ID: 2105080)
Visitor Counter : 31