ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுஷ் மருத்துவமுறைகளின் தரவு மற்றும் சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சியின் உலகளாவிய அறிக்கை

प्रविष्टि तिथि: 19 FEB 2025 5:44PM by PIB Chennai

பாரம்பரிய மருத்துவத்தின் உலகளாவிய அங்கீகாரத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக உலக சுகாதார அமைப்பு   நோய்கள் குறித்த சர்வதேச வகைப்பாட்டிற்கு ஏற்ப அதன்  புதுப்பிக்கும் நடைமுறைகளை அறிவித்துள்ளது. இந்த நடைமுறையின்படி பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான புதிய தொகுதியை அறிமுகப்படுத்துகிறது. இது ஆயுர்வேதம், சித்தா, யுனானி தொடர்பான பாரம்பரிய மருத்துவ முறைகளின் முறையான கண்காணிப்பு மற்றும் உலகளாவிய ஒருங்கிணைப்பில் ஒரு முக்கிய நிலையைக் குறிக்கிறது.

ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவ முறைகளுக்கான நெறிமுறைகள் ஐசிடி-11 டிஎம்-2 ஜனவரி 10, 2024 அன்று, புதுதில்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர்,  ஆண்டு முழுவதும் நடைபெற்ற சோதனை மற்றும் விவாதங்களைத் தொடர்ந்து இந்த புதுப்பிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது 2024 நவம்பர்  மாதத்தில் மலேசியாவில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில்   விவாதிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரக் கட்டமைப்பில் பாரம்பரிய மருத்துவத்தை சேர்ப்பது என்பது ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி ஆகியவை  அதிகாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டு ஐசிடி -11 பட்டியலில் வகைப்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது.  உலகளாவிய சுகாதார அறிக்கை, ஆராய்ச்சி மற்றும் கொள்கை வகுப்பதில் இந்த பாரம்பரிய மருத்துவ முறைகளின் அந்தஸ்து நிலையை இந்த உள்ளடக்கல் உயர்த்தி உள்ளது.

***

TS/SV/AG/DL


(रिलीज़ आईडी: 2104831) आगंतुक पटल : 97
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी