சுரங்கங்கள் அமைச்சகம்
இந்தியாவிற்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையில் லித்தியம் துரப்பணப் பணி மற்றும் சுரங்கத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
Posted On:
19 FEB 2025 5:37PM by PIB Chennai
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, சுரங்கத்துறைச் செயலாளர், மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் அர்ஜென்டினாவின் கட்டமர்கா மாகாண ஆளுநர் திரு ரவுல் அலெஜான்ட்ரோ ஜலீலை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினர். சுரங்கத்துறையில், குறிப்பாக லித்தியம் துரப்பணப் பணி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டன. சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம்(MECL) அர்ஜென்டினாவின் கேடமார்கா மாகாண அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த கூட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக இந்த ஒப்பந்தம் விளங்குகிறது.
'லித்திய கனிம வளம் அதிகளவு கிடைப்பதன் மூலம் மின்சார வாகன மின்கலன்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்புக்கு தேவையான அத்தியாவசிய தாதுக்களைப் பாதுகாப்பதில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய நட்பு நாடாக அர்ஜென்டினா உள்ளது. கேடமார்காவில் கனிஜ் பிதேஷ் இந்தியா நிறுவனம், கிரீன்கோ நிறுவனம் ஆகியவற்றின் தற்போதைய லித்தியம் தாது துரப்பண பணிகள் மற்றும் அர்ஜென்டினாவின் சுரங்கத் திட்டங்களில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. முதலீடு, நீண்டகால விநியோக ஒப்பந்தங்கள் மூலம் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கனிமத்தை பெறுவதில் உள்ள வாய்ப்புகள் குறித்து இரு நாடுகளும் ஆலோசனை நடத்தின.
***
TS/SV/AG/DL
(Release ID: 2104818)
Visitor Counter : 30