அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சூரிய கொரோனல் துளைகளின் வெப்ப நிலை மற்றும் அவற்றின் காந்தப் புலங்கள் கண்டறியப்பட்டுள்ளன
Posted On:
18 FEB 2025 4:27PM by PIB Chennai
சூரிய கொரோனல் துளைகளின் வெப்ப நிலை மற்றும் அவற்றின் காந்தப் புலங்களை புதிய ஆய்வு ஒன்று துல்லியமாக மதிப்பீடு செய்துள்ளது. இது செயற்கைக்கோள்களை பாதிக்கின்ற விண்வெளி வானிலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அதே போல் இந்திய கோடை கால மழைப்பொழிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எக்ஸ்ரே-யில் இருண்மை பகுதியாகவும், சூரியனில் புறஊதா ஒளிப் படங்களாகவும் உள்ள கொரோனல் துளைகள் காந்தப்புலங்களை திறந்திருப்பதோடு, கோள்களுக்கு இடையேயான தன்மையையும் விண்வெளி வானிலையையும் புரிந்து கொள்வதற்கு முக்கியமானதாக இருக்கின்றன.
1970-களில் எக்ஸ்ரே செயற்கைக் கோள்கள் மூலம் சூரியனின் சுற்றுப்பகுதியில் கொரோனல் துளைகள் கண்டறியப்பட்டன. இந்த சூரிய செயல்பாடு நொடிக்கு 450-800 கிலோ மீட்டர் வேகத்திலான காற்று சூரியனிலிருந்து வெளியேறும் துகள்களை வெகு எளிதாக விண்வெளிக்கு கொண்டு வருகின்றன.
இந்த ஆய்வு வானியல் மற்றும் வான் இயற்பியல் துறையின் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு இந்திய வான் இயற்பியல் கல்வி கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மஞ்சுநாத் ஹெக்டே முதன்மையானவராக இருந்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104369
***
TS/SMB/RR/KV
(Release ID: 2104447)
Visitor Counter : 67