சுரங்கங்கள் அமைச்சகம்
சுரங்க அமைச்சகத்தின் கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தின் மின் ரசீது பயன்பாடு குறித்த பயிலரங்கு
Posted On:
18 FEB 2025 11:59AM by PIB Chennai
சுரங்க அமைச்சகத்தின் தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர் (CCA) அலுவலகம், 2025 பிப்ரவரி 14 அன்று சுரங்க அமைச்சகத்தின் தலைமை கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரி தலைமையில் பயிலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியது. மின் ரசீதுகளை உருவாக்குதல், செயலாக்குதல், சரிபார்த்தல் ஆகிய செயல்முறைகளை நெறிப்படுத்தும் டிஜிட்டல் தளமான இ-பில்லின் செயல்பாடுகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை இந்தப் பயிலரங்கு வழங்கியது.
பில்லிங் செயல்பாட்டில் மேம்பட்ட செயல்திறன், வெளிப்படைத்தன்மைக்கான நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதில் இந்தப் பயிலரங்கு கவனம் செலுத்தியது. இந்தப் பயிலரங்கில் அமைச்சக அதிகாரிகள், விற்பனையாளர்கள், பிற பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 26 பங்கேற்பாளர்கள் நேரடியாக அமர்வில் கலந்து கொண்டனர், கூடுதலாக 20 பங்கேற்பாளர்கள் காணொலி மூலம் இணைந்திருந்தனர்.
இதில் மின்-பில்களை எவ்வாறு உருவாக்குவது, சமர்ப்பிப்பது, கண்காணிப்பது என்பது குறித்த விரிவான செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
***
(Release ID: 2104285)
TS/PLM/AG/KR
(Release ID: 2104306)
Visitor Counter : 17