சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
குரு ரவிதாஸின் பிறந்த தினத்தையொட்டி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
Posted On:
12 FEB 2025 6:13PM by PIB Chennai
குரு ரவிதாஸின் பிறந்த தினத்தையொட்டி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினர்களும், அமைச்சக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
"குரு ரவிதாஸ் அவர்கள் நமக்குக் காட்டிய வழிகாட்டுதலை நாம் பின்பற்ற வேண்டும்" என்று டாக்டர் வீரேந்திர குமார் கூறினார். குரு ரவிதாஸ் அவர்களின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, அமைச்சகம் அதன் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலம் நலிந்த மற்றும் சாதாரண மக்களின் நலனுக்காக பாடுபடுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் 2025 பிப்ரவரி 12, அன்று ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், உறுப்பினர்களும், அதிகாரிகளும் குரு ரவிதாஸ் பிறந்த நாளைக் கொண்டாடினர். மிகவும் விளிம்புநிலையில் உள்ள சமூகங்களின் உரிமைகள், நலன் மற்றும் பிரதிநிதித்துவத்திற்கான டாக்டர் வீரேந்திர குமாரின் பணிக்காக அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102414
***
TS/IR/AG/DL
(Release ID: 2102477)
Visitor Counter : 19