வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய வர்த்தகர்கள் நல வாரியத்தின் 5-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

Posted On: 12 FEB 2025 1:42PM by PIB Chennai

தேசிய வர்த்தகர்கள் நல வாரியத்தின் (NTWB) 5-வது கூட்டம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று புது தில்லி வணிஜ்யா வளாகத்தில் அதன் தலைவர் திரு சுனில் ஜே. சிங்கி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், 2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வாரியத்தின் நோக்கங்களை நிறைவேற்றவும், சிறு வணிகர்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலனுக்காகவும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தேசிய வர்த்தகர்கள் நலவாரியத்தின் தலைவர் திரு  சுனில் ஜே. சிங்கி, எடுத்துரைத்தார். உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அவர்களது கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சில்லறை வர்த்தகம் தொடர்பான நலத் திட்டங்கள் அனைவரையும் சென்றடையவும் அவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் உறுப்பினர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். குழு உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட முக்கிய ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் வாரியத்தின் நடவடிக்கைகளை  மையமாகக் கொண்டு விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசின் ஒன்பது அமைச்சகங்கள்/துறைகளின் பதவி வழி உறுப்பினர்கள் உள்ளிட்டோர்   கலந்து கொண்டனர்.

---

(Release ID 2102190)

TS/SV/KPG/KR


(Release ID: 2102310) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi