உள்துறை அமைச்சகம்
இடதுசாரி தீவிரவாதத்தை ஒழித்தல்
Posted On:
11 FEB 2025 1:22PM by PIB Chennai
இடதுசாரி தீவிரவாதப் பிரச்சனைக்கு முழுமையாக தீர்வுகாண "தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம்" கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய ஆயுதப்படை வீரர்களை வழங்குதல், மாநில காவல் படைகளை நவீனமயமாக்குதல், நிதி, உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை பகிர்தல் மூலம் மத்திய அரசு உதவுகிறது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சாலை வசதிகளை விரிவுப்படுத்துதல், தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
'தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை' மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதியாக செயல்படுத்தியதன் விளைவாக, 2024 ஏப்ரல் மாதம் வரை இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 38 ஆகக் குறைந்துள்ளது. 2024-ம் ஆண்டில் இடதுசாரி தீவிரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்களும் 81% குறைந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2024-ம் ஆண்டில் இடதுசாரி வன்முறை 47% -ஆகக் குறைந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் (2019-20 முதல் இன்றுவரை) இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ரூ. 1925.83 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை அமைச்சக இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101652
**
TS/GK/RJ/KR
(Release ID: 2101700)
Visitor Counter : 45