வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வர்த்தம் மற்றும் முதலீட்டை மேம்படுத்த ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பின் பிரிவை இந்தியா தொடங்கவுள்ளது
Posted On:
10 FEB 2025 10:19AM by PIB Chennai
ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்புடன் பொருளாதாரத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையின் ஒரு குறிப்பிடத்தக்க செயல்பாடாக, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், சுவிஸ் நாட்டின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி ஹெலீன் பட்லிகர் ஆர்டிடா, நார்வே நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. தாமஸ் நோர்வோல், ஐஸ்லாந்தின் நிரந்தர பிரதிநிதி மார்ட்டின் ஐஜோல்ஃப்சன், லிச்சென்ஸ்டீன் நாட்டு வெளியுறவு, கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு டொமினிக் ஹாஸ்லர், ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பின் துணைச் செயலாளர் திரு. மார்கஸ் ஸ்க்லாஜென்ஹாஃப் ஆகியோர் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பின் பிரிவை இன்று தொடங்கி வைக்கவுள்ளனர்.
2024 மார்ச் 10 அன்று கையெழுத்திடப்பட்ட இந்தியா ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பின் வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் அத்தியாயம் 7 இன் படி, இந்த முயற்சி, இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன் ஆகிய நான்கு ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் வணிக வசதியை மேம்படுத்துவதற்கான ஒரு பிரத்யேக தளமாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொடக்க நிகழ்ச்சியில், இந்திய அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்க உறுப்பு நாடுகளின் உயர் அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை மற்றும் வணிகத்துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர். ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்க நாடுகளுடன் வலுவான பொருளாதார ஈடுபாட்டிற்கான இந்தியாவின் தொலைநோக்கு குறித்து அவர்கள் எடுத்துரைக்கவுள்ளனர்.
மேலும் விவரங்களை இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101215
***
TS/IR /RJ/RR
(Release ID: 2101279)
Visitor Counter : 55