பாதுகாப்பு அமைச்சகம்
தற்சார்பு இந்தியா: இந்திய கடற்படைக்கு 28 இஓஎன்-51 அமைப்புகளுக்காக பிஇஎல் நிறுவனத்துடன் ரூ. 642 கோடி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது
Posted On:
08 FEB 2025 3:39PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சகம், இன்று (2025 பிப்ரவரி 08) புதுதில்லியில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) நிறுவனத்துடன் 11 புதிய தலைமுறை கடல் ரோந்து கப்பல்களுக்கான 28 இஓஎன்-51 அமைப்புகளுக்கும் இந்திய கடற்படைக்கு மூன்று கேடட் பயிற்சி கப்பல்களை வாங்குவதற்குமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இஓஎன்-51 என்பது எலக்ட்ரோ ஆப்டிகல் தீ கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இது எலக்ட்ரோ ஆப்டிகல், தெர்மல் இமேஜர்ஸ் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இலக்குகளைத் தேடுதல், கண்டறிதல், வகைப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்கிறது. இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளில் பல வேலைவாய்ப்பை உருவாக்கும். அத்துடன் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு இந்திய தொழில்துறைகளின் தீவிர பங்கேற்பை ஊக்குவிக்கும். பாதுகாப்பில் 'தற்சார்பு' என்ற இலக்கை அடைவதற்கான அரசின் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை இது வழங்கும்.
***
PLM/KV
(Release ID: 2101024)
Visitor Counter : 48