இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி இளைஞர் உச்சிமாநாடு 2025-ஐ , மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்கிறார்

Posted On: 07 FEB 2025 6:38PM by PIB Chennai

இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் விவகாரங்கள் துறை, 2025 பிப்ரவரி 7 முதல் 11 வரை குஜராத்தின் காந்திநகரில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி இளைஞர் உச்சிமாநாடு 2025-ஐ  ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பிப்ரவரி 8, 2025 அன்று இந்த நிகழ்வை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

2018 ஆகஸ்ட் 30-31 தேதிகளில் காத்மாண்டுவில் நடைபெற்ற 4-வது உச்சிமாநாட்டின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடி மூன்று நாள் இளைஞர் உச்சிமாநாட்டை நடத்துவதாக அறிவித்தார். பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைத்து, உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்படும் இளைஞர்கள் தலைமையிலான முன்முயற்சிகள் குறித்த அனுபவங்களையும், நுண்ணறிவுகளையும் பரிமாறிக் கொள்வதை இளைஞர் உச்சிமாநாடு நோக்கமாகக்  கொண்டுள்ளது.

உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 70 பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளின் முன்னேற்றம் குறித்த பேச்சுவார்த்தைக்கான விலைமதிப்பற்ற தளத்தை இந்த உச்சிமாநாடு வழங்கும். ஒவ்வொரு உறுப்பு நாடும் 10 இளைஞர் பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100771

 

***

RB/DL


(Release ID: 2100914) Visitor Counter : 30


Read this release in: English , Gujarati , Urdu , Hindi