கலாசாரத்துறை அமைச்சகம்
இந்திய கலை வரலாற்று சபையின் 32-வது அமர்வு பிப்ரவரி 8 முதல் 10 வரை நொய்டாவில் உள்ள இந்திய பாரம்பரிய நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Posted On:
07 FEB 2025 12:58PM by PIB Chennai
இந்தியக் கலை வரலாற்று சபை என்பது குவஹாத்தியை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்திய கலை பாரம்பரியத்தை ஆய்வு செய்வதற்கான அகில இந்திய அமைப்பாகும். இந்த ஆண்டு, இந்திய கலை வரலாற்று சபையின் 32-வது அமர்வு, 2025 பிப்ரவரி 8 முதல் 10 வரை நொய்டாவில் உள்ள இந்திய பாரம்பரிய நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இந்த அமர்வு "கலை மற்றும் கலாச்சாரத்தில் இந்தியக் காவியங்களை வழங்குதல்" என்ற கருப்பொருளில் நடத்தப்படுகிறது. இது காவியங்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வகையான கலை வெளிப்பாடுகளை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு வாய்மொழி, உரை மற்றும் காட்சி ஊடகங்கள் வழியாக இந்த விவரிப்புகள் இடம் பெறும். இது காவியங்களின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுவதாக இருக்கும்
.மேலும் அவற்றின் செல்வாக்கையும், பண்டைய காலம் முதல் சமகாலம் வரையிலான பிரதிநிதித்துவத்தையும் வெளிப்படுத்தும்.
இந்த மாநாட்டை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சரும், இந்திய பாரம்பரிய நிறுவனத்தின் வேந்தருமான திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுத் தொடங்கி வைப்பார். நாடாளுமன்ற உறுப்பினரும், கலாச்சாரத் துறையின் முன்னாள் இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), தேசிய அருங்காட்சியக நிறுவனத்தின் முன்னாள் வேந்தருமான டாக்டர் மகேஷ் சர்மா தொடக்க நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்வார்.
இந்தியாவின் மிகப் பழமையான காவியங்களான ராமாயணமும், மகாபாரதமும், நாட்டின் கலாச்சார நெறிமுறைகளைத் தொடர்ந்து வடிவமைக்கின்றன. காலப்போக்கில், காவியங்களின் வெவ்வேறு பதிப்புகள் வெவ்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்டன, அவை வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பிராந்தியங்களின் தனித்துவமான வெளிப்பாடுகளை பிரதிபலிக்கின்றன. உள்ளூர் மாறுபாடுகளுடன் காவியங்கள் சீர்திருத்தப்படுகின்றன.
இந்த மாநாட்டில் 200-க்கும் அதிகமான சுருக்க சமர்ப்பிப்புகள் மதிப்பீட்டிற்காகப் பெறப்பட்டுள்ளன. புராணங்கள், வரலாறு, அழகியல், கலாச்சாரப் பரிமாற்றங்கள், சர்வதேச மரபுகள், நவீனத்துவ மறுவிளக்கங்கள், பிராந்திய தாக்கங்கள் போன்ற அம்சங்களை ஆராயும் கருப்பொருள் சொற்பொழிவுகளின் பன்முகத்தன்மையை இவை பிரதிபலிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100570
***
TS/SMB/AG/RR
(Release ID: 2100712)
Visitor Counter : 27