பாதுகாப்பு அமைச்சகம்
அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சர் திரு பீட் ஹெக்சேத் உடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடினார்
Posted On:
06 FEB 2025 7:42PM by PIB Chennai
அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சராக திரு பீட் ஹெக்சேத் உறுதி செய்யப்பட்ட பின் 2025 பிப்ரவரி 6 அன்று அவருடனான முதலாவது தொலைபேசி உரையாடலில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தரை, வான், கடல் எனப் பல தளங்களையும் உள்ளடக்கிய இந்தியா- அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து இரு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவாக்கம், இந்த உறவுகளை ஆழப்படுத்துவதில் உள்ள தங்களின் உறுதிப்பாடு ஆகியவை குறித்து இருதரப்பினரும் கருத்துப்பரிமாற்றம் செய்துகொண்டனர்.
தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பாதுகாப்பு தொடர்பான தொழில்துறை விநியோகச் சங்கிலித் தொடரில் ஒருமைப்பாடு, தகவல் பகிர்வு, கூட்டு ராணுவப் பயிற்சி ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவது என இரு அமைச்சர்களும் முடிவு செய்துள்ளனர்.
அதிகரித்து வரும் பாதுகாப்புத்துறை புதிய கண்டுபிடிப்புகளுக்கு அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை விரிவாக்குவதற்குத் தேவையான ஆதரவு அளிக்கவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். 2025-2035 காலகட்டத்திற்கான இருதரப்பு ஒத்துழைப்பை கட்டமைக்கும் நோக்கத்துடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு வரைவுத் திட்ட தயாரிப்பில் ஒருங்கிணைந்து செயல்படவும் இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளன.
***
(Release ID: 2100413)
TS/SMB/AG/RR
(Release ID: 2100619)
Visitor Counter : 16